இரவோடு இரவாக நடந்த சோதனை.. சரியாக இலக்கை தாக்கிய அக்னி 2.. ஒடிசாவில் என்ன நடந்தது?

இரவோடு இரவாக நடந்த சோதனை.. சரியாக இலக்கை தாக்கிய அக்னி 2.. ஒடிசாவில் என்ன நடந்தது?

புவனேஷ்வர்: நேற்று இரவோடு இரவாக அக்னி 2 ஏவுகணை ஒடிசா அருகே கடல் பகுதியில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. சோதனை மிக துல்லியமாக வெற்றிபெற்றதாக பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பில் அக்னி வகை ஏவுகணை அதிக முக்கியத்துவம் வகிக்கிறது. அக்னி 1 தொடங்கி அக்னி 5 வரை பல்வேறு வகையான அக்னி ஏவுகணைகளை இந்தியா உருவாக்கி பயன்படுத்தி வருகிறது. இதில் அக்னி 5 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிகமாக சென்று தாக்க கூடியது.

அக்னியின் மற்ற ஏவுகணைகள் அவ்வப்போது சோதனை செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், நேற்று திடீர் என்று அக்னி 2 ஏவுகணை இரவோடு இரவாக சோதனை செய்யப்பட்டது.

imageஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை.. நிர்மலா சீதாராமன்

யார் செய்தது

அக்னி 2 ஏவுகணை ஒரு தரைப்பரப்பில் இருந்து இன்னொரு தரைப்பரப்பில் உள்ள இலக்கை தக்க கூடிய வகையான ஏவுகணைகள் ஆகும். இதை ஆங்கிலத்தில் surface to surface ஏவுகணை என்று கூறுவார்கள். இந்தியா உருவாக்கி உள்ள இந்த அக்னி 2 ஏவுகணை 2000 -3500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும்.

சரியாக தாக்குதல்

நேற்று இந்த ஏவுகணை வெற்றிகரமாக மீண்டும் சோதனை செய்யப்பட்டது. ஒடிசா அருகே இருக்கும் இந்திய கடல் பகுதியில் அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை செய்யப்பட்டது. அங்கிருக்கும் ஏவுதளம் 4ன் மூலம் இந்த அக்னி 2 ஏவப்பட்டது. இது மிக துல்லியமாக தாக்குதலை நடத்தியது.

யார் செய்தது

இந்தியாவின் பாதுகாப்பு படையில் இருக்கும் Strategic Forces Command எனப்படும் எஸ்எப்சி படை பிரிவு மூலம் இந்த சோதனை செய்யப்பட்டது. டிஆர்டிஓ படையினர் இந்த சோதனையை உடன் இருந்து கவனித்து இருக்கிறார்கள். சரியாக 1000+ கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புள்ளியை இந்த ஏவுகணை தாக்கி உள்ளது.

முதலில் எப்போது

இந்த அக்னி 2 ஏவுகணை முதல் முதலாக 1999ல் சோதனை செய்யப்பட்டது. அதன்பின் மீண்டும் 2010ல் சோதனை செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தில் தற்போது இது பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 17 டன் எடை கொண்ட இது 1000 கிலோ எடையை தூக்கி செல்லும். இது 20 மீட்டர் நீளம் கொண்டது.

ஏன் திடீர் சோதனை

இந்த அக்னி 2 ஏவுகணையை இரவில் சோதனை செய்தது இல்லை. இரவில் இதன் தாக்குதல் திறனை சோதிப்பதற்காக நேற்று சோதனை செய்துள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் இந்த அக்னி 2 ஏவுகணை அப்டேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram