17 வயது சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்டேனா?.. நானா?.. அவரை பார்த்ததே இல்லை.. இளவரசர் ஆண்ட்ரூ!

17 வயது சிறுமியுடன் உறவு வைத்துக் கொண்டேனா?.. நானா?.. அவரை பார்த்ததே இல்லை.. இளவரசர் ஆண்ட்ரூ!

லண்டன்: 18 வயது பூர்த்தியடையாத டீன்ஏஜ் பெண்ணுடன் நான் உறவு வைத்துக் கொண்டதே இல்லை என இளவரசர் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து ராணி 2-ஆம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியின் இளைய மகன்தான் ஆண்ட்ரூ (59). இவர் இளவரசர் சார்லஸுக்கு இளைய சகோதரன் ஆவார். இவர் கடந்த 1996-ஆம் ஆண்டு சாராவை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

இவரது நண்பர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் அமெரிக்காவில் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மிகப் பெரிய பணக்காரர். இவர் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபரி கிளிண்டன் ஆகியோருக்கும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

பலாத்காரம்

ஜெஃப்ரி மீது ஏராளமான பாலியல் புகார்கள் உள்ளன. இவர் கடந்த 6 மாதங்களுக்கு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் கரீபியன் தீவில் உள்ள தனது வீட்டில் சிறுமிகளை கடத்தி சென்று பலாத்காரம் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.

இளவரசர் ஆண்ட்ரூ

இந்த வழக்கில் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெஃப்ரி ஆகஸ்ட் மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் மீது பாலியல் புகார் கூறிய வெர்ஜினியா கியூப்ரே இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் புகார்களை கூறியுள்ளார்.

ஜெஃப்ரி

இவர் கூறுகையில் ஜெஃப்ரி என்னுடன் பலமுறை உறவு வைத்துக் கொண்ட நிலையில் இளவரசர் ஆண்ட்ரூவும் என்னுடன் 3 முறை உறவு வைத்துக் கொள்ளுமாறு ஜெஃப்ரி கட்டாயப்படுத்தினார். அதோடு பல பணக்கார நண்பர்களுக்கும் என்னை பங்கு போட்டு கொடுத்தார்.

பெண்ணை சந்தித்ததே இல்லை

கடந்த 2001-ஆம் ஆண்டு அதாவது 17 வயதில் நான் ஆண்ட்ரூவுடன் உறவு வைத்து கொண்டேன். அதன் பின்னர் நியூயார்க் நகரிலும் கரிபீயன் தீவிலும் உறவு வைத்துக் கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டேன் என்றார். இந்த நிலையில் இதுகுறித்து ஆண்ட்ரூ பேட்டி அளிக்கையில், இது போன்ற பெண்ணை நான் சந்தித்ததே இல்லை.

பார்ட்டிக்கு சென்றேன்

ஆனால் இந்த பெண், அதுவும் 17 வயதில் நான் உறவு வைத்து கொண்டேன் என கூறுகிறார். டீன் ஏஜ் பெண்ணிடம் நான் அது போல் நடந்து கொண்டதே இல்லை. அவர் சொல்லும் நேரத்தில் நான் என் குழந்தைகளை அழைத்து கொண்டு ஒரு பார்ட்டிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அவர் என்னுடன் பாவனை கொடுக்கும் போட்டோவின் உண்மைத்தன்மை தெரியவில்லை என்றார்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram