Press "Enter" to skip to content

தாறுமாறாக உயரும் கல்லெண்ணெய் விலை..!

கல்லெண்ணெய் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது. மேலாய்வுதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து இந்தியாவில் கல்லெண்ணெய் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் கல்லெண்ணெய் விலை இன்று 13 காசுகள் உயர்ந்து 76.81 ரூபாயாக இருக்கிறது.  டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 1 லிட்டர் டீசல் விலை 69.54 ரூபாயாக நேற்றைய விலையிலேயே விற்கப்படுகிறது. கடந்த 10 நாட்களாக கல்லெண்ணெய் விலை மட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டீசல் விலையில் 1 வாரத்திற்கு மேலாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »