வைகை, தாமிரபரணி கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை எச்சரிக்கை

மதுரை: வைகை, தாமிரபரணி கரையோர பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். நீர்வரத்து அதிகரிப்பால், வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Source: Dinakaran