திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி டிச.10-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி டிச.10-ம் தேதி அன்று  உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Source: Dinakaran