கொடைக்கானலில் அரசு சார்பில் மீன் பண்ணை அமைக்க தடை

மதுரை:  கொடைக்கானலில் மீன் பண்ணை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கவுஞ்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்
உள்ளிட்ட பலர் உயர்நீதிநீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு
சார்பில் கவுஞ்சியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மீன் பண்ணை அமைக்கப்பட
உள்ளது. இதற்காக 86.93 ஹெக்டேர் நிலம் மீன்வளத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோணலாற்றில் இருந்து தண்ணீர் எடுக்க உள்ளனர். இதனால் குடிநீர்
தட்டுப்பாடு, விவசாயத்திற்கு பற்றாக்குறை ஏற்படும். சுற்றுச்சூழல்
பாதிக்கும். எனவே, மீன் பண்ணை அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு
மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம்,
ஆர்.தாரணி ஆகியோர் மீன் பண்ணை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Source: Dinakaran