விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்.. செக் பண்ணி பாருங்க.. இஸ்ரோ சிவன் அதிரடி பேட்டி!

விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்.. செக் பண்ணி பாருங்க.. இஸ்ரோ சிவன் அதிரடி பேட்டி!

How did Shanmuka Subaramanyam help NASA

டெல்லி: விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது, இது தொடர்பான தகவலை இஸ்ரோவின் இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டுவிட்டோம் என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார்.

நேற்று நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு பிறகு இந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் நிலவின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கியது. நாசாவின் LROC விண்கல ஆய்வு கருவியின் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது.

imageகூகுள் தாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனார் சுந்தர் பிச்சை.. குவியும் பாராட்டுகள்

யார்

சந்திராயன் 2ன் ஆர்பிட்டர் சரியாக வேலை செய்து வரும் நிலையில் அதன் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் அனுப்பிய மெயில் மற்றும் டிவிட் ஆதாரங்களை வைத்து இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதனால் ஒரே நாளில் உலகம் முழுக்க சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் மிகுதியாக பகிரப்பட்டுி உள்ளார்.

பேட்டி என்ன

இந்த நிலையில் இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் கே சிவன் ஒடிசாவில் அளித்த பேட்டியில், விக்ரம் லேண்டரை இஸ்ரோ முன்பே கண்டுபிடித்து விட்டது, இது தொடர்பான தகவலை இஸ்ரோவின் இணையதளத்தில் ஏற்கனவே வெளியிட்டுவிட்டோம். இணைய பக்கத்தில் அந்த தகவல் இப்போதும் தேதியுடன் இருக்கிறது. நீங்கள் அதை சோதனை செய்து பார்க்கலாம்,

வெளியிட்டோம்

செப்டம்பர் 10ம் தேதி இது தொடர்பாக நாங்கள் தகவலை வெளியிட்டோம் . ஆனால் அப்போது அந்த லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் இப்போது நாசா வெளியிட்ட அறிக்கையில் நாங்கள் பெரிதாக கவனம் செலுத்தவில்லை.

ஆய்வு செய்யவில்லை

விக்ரம் லேண்டர் குறித்து சண்முக சுப்ரமணியம் அளித்த புகைப்படங்களை நாங்கள் ஆய்வு செய்யவில்லை. ஏற்கனவே லேண்டரை கண்டுபிடித்துவிட்டதால், நாங்கள் அந்த புகைப்படங்களை ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் நன்றாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram