Press "Enter" to skip to content

லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டோம்: சிவன்3 நிமிட வாசிப்புஇஸ்ரோவின் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச…

இஸ்ரோவின் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நேற்று, இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2வின், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவியதாக மதுரையைச் சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியனுக்குக்கு நேற்று நன்றி தெரிவித்தது. “நாசாவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்து விகரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவியதாக சண்முக சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

செப்டம்பர் 17, அக்டோபர் 14, 15 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நாசா வெளியிட்ட புகைப்படங்களை வைத்து சண்முக சுப்பிரமணியன் லேண்டரை கண்டுபிடித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதியே கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார்.

image

ராஜஸ்தான் கிஷான்கர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், இஸ்ரோவின் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது. எங்களது இணையதளத்திலும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் இஸ்ரோ இணையதளத்தில் சென்று தகவல்களைப் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருக்கிறது. அதில், விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், லேண்டருடன் இதுவரை எந்த தொடர்பும் இல்லை. லேண்டருடனான தொடர்பை மீண்டும் மேற்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Minambalam.com

More from செய்திகள்More posts in செய்திகள் »