தன் சாதிப்பெயரை குறிப்பிட்டு  பரபரப்பாக்கிய நடிகர் விஜய்யின் தந்தை..!! வாயடைத்துப் நின்ற பிரபலங்கள்..!!

தன் சாதிப்பெயரை குறிப்பிட்டு பரபரப்பாக்கிய நடிகர் விஜய்யின் தந்தை..!! வாயடைத்துப் நின்ற பிரபலங்கள்..!!

நான் ஒரு கிறித்தவர், முதலியார்  சமூகத்தைச் சேர்ந்த சோபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தன் குடும்ப விவரங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.  புத்தக வெளியீட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர்  முதன் முறையாக இவ்வாறு பேசியுள்ளார்.  

சென்னை தியாகராயநகர் வாணி மஹாலில் நடிகர் ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன், மற்றும் அவரின் தாய் வரலட்சுமி ஆகியோர் எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.  அதில் நடிகர் பிரபு,  நடிகர் விஜயின்  தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு நூல்களை வெளியிட்டு சிறப்பித்தனர். 

அந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ சந்திரசேகர்,  ஆரம்பகால கட்டத்தில் மிகவும் கடினப்பட்டு திரைப்படத்திற்கு வந்ததாக தெரிவித்தார்.  சொந்த ஊரிலிருந்து அனுமதிச்சீட்டு எடுக்காமல் சென்னைக்கு தொடர் வண்டிஏறி வந்ததாக கூறிய அவர்,  சென்னையில்  தங்குவதற்கு இடம் கொடுத்த நீலகண்டன் என்பவரது மகளான சோபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறினார்.  

அதே நேரத்தில் தான் ஒரு கிறிஸ்தவர் என்றும் தனது மனைவியை முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் என்றும் அவர் மேடையில் பகிரங்கமாக குறிப்பிட்டார்.  அத்தோடு இல்லாமல் ஜெயம் ரவியின் தந்தை மோகன் ஒரு இஸ்லாமியர் என்றும்,  அவரது தாய் வரலட்சுமி ஒரு இந்து பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்றும், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். 

அத்துடன்,  தன் மகன் விஜய்யை பலரது  கைகால்களில்  விழுந்து லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் சேர்த்ததாகவும்,  ஆனால் அவர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு நடிக்க வந்து விட்டார் எனவும் தெரிவித்தார்.  அவரின் பேச்சு  அங்கிருந்த பவரை  ஆச்சரியப்பட வைத்தது,  இளையதளபதி விஜயின் தந்தையா இப்படி பேசுகிறார் என்ன வாயடைக்க வைத்தது.

 

அப்போது மேடையில் பாக்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் இருந்தனர் எனவே தன் பழைய நினைவுகளை அவர் உற்சாகமாக பேசினார்.  பாஜக உள்ளிட்ட பல இந்து அமைப்புகள் எஸ்.ஏ. சந்திரசேகரும்  அவரது மகனும் நடிகருமான விஜய்யின்  உண்மையான பெயர் ஜோசப் விஜய் என கூறி அரசியல் பேசி வரும் நிலையில் ,  தான் ஒரு கிறித்தவர் என அவர் வெளிப்படையாக  பகிரங்கமாக தெரிவித்திருப்பது  குறிப்பிடத்தக்கது. 

லோன் தராததால் விரக்தி.. துப்பாக்கி, கத்தியுடன் வங்கிக்குள் புகுந்து கதற விட்ட நபர்..! அதிர்ச்சி கண்காணிப்பு தொலைக்காட்சி

Source: AsianetTamil

Author Image
Kundralan M