‘என் சாவுக்கு காரணம் ஆசிரியர் ரவி தான்’: உசிலப்பட்டியில் தற்கொலை செய்துகொண்ட மாணவன் எழுதிய கடிதம் வெளியீடு!

‘என் சாவுக்கு காரணம் ஆசிரியர் ரவி தான்’: உசிலப்பட்டியில் தற்கொலை செய்துகொண்ட மாணவன் எழுதிய கடிதம் வெளியீடு!

மதுரை: உசிலம்பட்டியில் 10ம் வகுப்பு மாணவன் பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் எழுதி வாய்த்த கடிதம் கிடைத்துள்ளது. மதுரை மாவட்டம் தொட்டப்பாநாயக்கணூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் பாலாஜி உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  படித்து வந்துள்ளார். 9ம் வகுப்பு படித்த போது தனது பள்ளி கணித ஆசிரியர் ரவி நடத்திவந்த டியூசனில் படித்த பாலாஜி 10 ம் வகுப்பு டியூசன் வேறு இடத்தில் சேர்ந்துள்ளார். இதனால் கணித ஆசிரியர் ரவி பாலாஜியை தினமும் வெறுப்புடன் பார்த் தாகவும் , காரணம் இல்லாமல் திட்டி அடிப்பதாகவும் தனது பெற்றோரிடம் அடிக்கடி சொல்லி வந்துள்ளார். ஆறு மாதங்களாக தொடர்ந்து இப்படியே சென்றுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வழக்கமாக பள்ளிக்கு சென்ற பாலாஜியை கணிதப்பாடப்பிரின் போது ஆசிரியர் ரவி திட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் மனமுடைந்த பாலாஜி பள்ளிமுடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார் . இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

இது தொடர்பாக உசிலம்பட்டி காவல் துறையினர் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் திருப்பமாக மாணவனின் பாட புத்தகத்தின் ஒரு பக்கத்தில் தனது சாவுக்கு கணித ஆசிரியர் ரவி தான் காரணம் என்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ‘ என் சாவுக்கு காரணம் ரவி. என்னை மிகவும் கொடுமை செய்தான். அவனுக்கு தண்டனை தர வேண்டும். முக்கியமாக என் ரத்த கண்ணீருக்கு காரணமான ரவிக்கு தண்டனை தர வேண்டும் என்றும் குறிப்பிட்டு தனது நண்பருக்கும் பெற்றோருக்கும் இறுதி வணக்கம்’ என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து பாலாஜியின் தந்தை சிங்கம் இந்த கடிதத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கடிதத்தில் இருக்கும் கையெழுத்து மாணவனின் கையெழுத்துடன் ஒன்றாக உள்ளதா? எனபது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy