Press "Enter" to skip to content

சாத்தான்குளம் அருகே வெறி நாய் கடித்து 15 ஆடுகள் பலி

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே வெறிநாய் தாக்கியதில் 15 ஆடுகள் செத்து மடிந்தன. தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் தெற்குதெருவை சேர்ந்தவர் பால் (47). இவரது  வீட்டின் அருகே கிடை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார்.  இன்று அதிகாலை ஆடுகள் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து பால், அங்கு சென்றுபார்த்த போது கிடையில் அடைத்து வைத்திருந்த 15 ஆடுகள் ஒன்றன் பின் ஒன்றாக செத்து மடிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இறந்த ஆடுகள் மீது காயங்கள் காணப்பட்டன. வெறிநாய், கிடையில் புகுந்து ஆடுகளை தாக்கியதால் அவை செத்து மடிந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெங்கடேசபுரம் விஏஓ கந்தசாமி, சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். சாத்தான்குளம் பகுதியில் சமீபகாலமாக நாய் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் வீதியில் நடந்து செல்ல அச்சப்படுகின்றன. பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட ஆடுகளின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »