கோடிகளைக் குவிக்கும் நித்தியின் வசிய வர்த்தக வலைப்  …8 நிமிட வாசிப்புசத்சங் என்ற பெயரில் நித்தியானந்தா ஆற்றும் சொற்பொழிவுகள், அதற்கு கூடும் கூட்டம்,…

கோடிகளைக் குவிக்கும் நித்தியின் வசிய வர்த்தக வலைப் …8 நிமிட வாசிப்புசத்சங் என்ற பெயரில் நித்தியானந்தா ஆற்றும் சொற்பொழிவுகள், அதற்கு கூடும் கூட்டம்,…

சத்சங் என்ற பெயரில் நித்தியானந்தா ஆற்றும் சொற்பொழிவுகள், அதற்கு கூடும் கூட்டம், அந்தக் கூட்டத்தின் மூலம் சேர்க்கப்படும் நன்கொடைகள்…. இவையெல்லாம் தாண்டி நித்தியானந்த குருகுலத்தில் வந்து சேர்ந்த இளம் பிஞ்சுகள் அவர்கள் ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும். அந்தப் பச்சிளம் பிஞ்சுகளை வைத்துதான் தனது நிரந்தரமான நிதிக் கட்டமைப்பை வலுப்படுத்தியிருக்கிறார் நித்யானந்தா.

பிடதியில் இருக்கும் குருகுலமானாலும் தற்போது அகமதாபாத்தில் இழுத்து மூடப்பட்ட குருகுலமானாலும் நூற்றுக்கணக்கான- ஆயிரக்கணக்கான பதின்பருவ ஆண்களும் பெண்களும் அங்கே ஞானம் கற்பதற்காக தங்களை நித்யானந்தாவிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

அவர்கள் தங்களை எந்தெந்த விதங்களில் எல்லாம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பது பற்றி பல்வேறு புகார்களும், சர்ச்சைகளும், வழக்குகளும் நீதிமன்றங்களில் இருக்கின்றன. அவற்றுக்குள் நாம் பிறகு செல்வோம். தன்னிடம் ஞானம் அடைவதற்காக வந்த குருகுல மாணவர்களை நித்தியானந்தா டோனார் பிடிக்கும் வேலையில் அதாவது ஸ்பான்சர்கள் பிடிக்கும் வேலையில் எப்படி எல்லாம் இறக்கி விட்டிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

நித்யானந்தாவின் சத்சங்கத்தில் ஆரம்பத்தில் நூற்றுக்கும் குறைவான நபர்களே வந்திருக்கிறார்கள். அதன்பின் அவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு வந்து குருகுலத்தில் சேர்த்து விட்டு இருக்கிறார்கள். பிள்ளைகள் மட்டுமல்ல தங்களுக்கு தெரிந்த மற்றவர்கள், தங்கள் துறைசார்ந்த நண்பர்கள் ஆகியோருக்கும் நித்தியானந்தாவின் சத்சங்கம் பற்றி அவர்கள் விளக்கியிருக்கிறார்கள். அதன்மூலம் ஒவ்வொருவரும் அடுத்த சங்கத்துக்கு வரும்போது இரண்டு பேர் அல்லது நான்கு பேரை அதிகமாக அழைத்து வரவேண்டும் என்பது நித்தியானந்தாவின் அன்புக் கட்டளை

இப்படி மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற முறையில் ஒவ்வொரு சத் சங்கத்துக்கும் அவரவர் தளங்களிலிருந்து அவரவர் துறைகளில் இருந்து அதிகமான நபர்களை உள்ளே அழைத்து வருவது என்பதுதான் கடந்த பத்து வருடங்களாக நித்தியானந்தா செய்துவரும் வித்தை. ஏனெனில் ஒவ்வொவருர் நுழைவுக்கும் லட்சக்கணக்கில் நுழைவுக் கட்டணம் உண்டு.

சத்சங்கத்துக்கு வருகிற மிகப் பெரும் தொழிலதிபர்களை, பெரும்புள்ளிகளை, உயர் அதிகாரிகளை, அரசியல்வாதிகளை ஒரே சந்திப்பில் இவர்கள் இப்படி, இவர்கள் அப்படி என்று கணித்துவிடுவார் நித்யானந்தா. பின்பு தனது குருகுலத்தில் இருக்கும் மாணவ-மாணவிகளை தேர்ந்தெடுத்து… எந்தெந்த புள்ளிகளுக்கு எந்தெந்த மாணவர்களின் அதாவது சீடர்களின் மூலம் காரியம் சாதிக்க முடியும் என்ற அசைன்மென்ட் கொடுப்பார் நித்யானந்தா.

image

உதாரணமாக வெளியுறவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் சத்சங்கத்துக்கு தொடர்ந்து வருகிறார் என்றால் தன்னிடம் இருக்கும் குருகுல மாணவர்களில் அவரது துறை சார்ந்து அவரது விருப்பம் சார்ந்து பேசக்கூடிய மாணவரை தேர்ந்தெடுத்து அந்த அதிகாரியிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்க வைப்பார். அந்த அதிகாரி சத்சங்கத்துக்கு வரும் போதெல்லாம் அவரை வரவேற்று உபசரித்து பேசி வழியனுப்பி வைக்க வேண்டியது வரை அந்த மாணவரின் பொறுப்பு.

ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் சங்கத்துக்கு வருகிறார் என்றால் அவரது அலை நீளத்தோடு ஒன்றிப் போகக்கூடிய அவரது துறைசார்ந்து பேசி பழக கூடிய இன்னொரு மாணவரை அல்லது மாணவியை அவரோடு தொடர்ந்து உரையாட வைப்பார்.

இவ்வாறு ஒவ்வொரு தொழிலதிபருக்கும் ஒவ்வொரு பெரும்புள்ளி க்கும் ஒவ்வொரு அதிகாரிக்கும் தன் சார்பில் அதாவது நித்யானந்தாவின் சார்பில் ஒவ்வொரு மாணவ மாணவியர் பொறுப்பாளர்கள் ஆக்கப்படுகிறார்கள். இதுதான் அடுத்தகட்டமாக குறிப்பிட்ட அந்த தொழிலதிபர்களிடம் நித்தியானந்த பீடத்துக்கு பணமாகவோ நகைகளாக நிலமாகவோ டொனேஷன்கள் பெறுகிறார்கள்.

குருகுலத்தின் மாணவர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப இந்தப் பொறுப்பு அதிகமாகும். ஒருவரிடமே பல பெரிய மனிதர்களுக்கான பொறுப்புகள் கொடுக்கப்படும். உதாரணமாக அரசியல்வாதிகள் விளையாட்டு வீரர்கள் தொழிலதிபர்கள் இவர்களப் போல ஒவ்வொரு நித்தியானந்தாவின் சிஷ்யனும், சிஷ்யையையும் குறைந்தது 10 பெரிய மனிதர்களின் தொடர்புகளைத் தொடர்ந்து பேண வேண்டும்.

அதன்மூலம் ஆசிரமத்திற்கு அவர்களிடம் இருந்து அதிகபட்சமாக எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு வாங்க வேண்டும். இந்த நீண்ட கால நிபந்தனை ஒருகட்டத்தில் அன்றாட இலக்குடாக மாறிவிட்டது. ஆம் ஒவ்வொரு நாளும் குறைந்தது மூன்று லட்சத்தில் இருந்து அதிகபட்சம் எத்தனை கோடி ரூபாய்கள் வேண்டுமானாலும் ஆசிரமத்துக்கு குருகுல மாணவர்கள் நன்கொடையாக திரட்டி தரலாம். இப்போது அந்த சீடர்களின் அன்றாட இலக்கு 8 கோடி ரூபாய். இந்த டாக்கெட்டை அடைவதற்காக அவர்கள் ஆரம்பத்தில் தானாகவே விரும்பிச் செய்த உத்திகள், இன்று சுய கொடுமைகளாக மாறிவிட்டன. அவ்வாறு அவர்கள் திரட்டித் தரும் நன்கொடைக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு 10% கமிஷனும் கொடுத்திருக்கிறார் நித்யானந்தா.

24 மணி நேரமும் ஆசிரமத்திலேயே இருக்கும் அவர்களுக்கு இந்த 10% கமிஷன் எதற்கு என்ற கேள்வி எழலாம். ஆனால் அந்த 10% கமிஷனும் அடுத்தடுத்த நாட்களில் அவர்களாலேயே ஆசிரமத்திற்கு வழங்கப்படும் என்பதுதான் நித்தியின் வசிய சக்தி செய்திருக்கும் வர்ணஜாலம்..

இன்று நித்யானந்தா ஆசிரமத்துக்கு லட்சங்களைக் கொடுத்தவர்கள், நாளை இன்னொருவரிடம் இருந்து நித்யானந்தா ஆசிரமத்துக்காக கோடிகளைப் பெற்றுத் தருவார்கள் என்பது தான் இந்த எம்.எல்.எம்.ஆன்மீக வசிய வர்த்தக வலைப்பின்னலின் அதிசயம்.

அதற்கான மிக முக்கியமான மார்க்கெட்டிங் தோளாக நித்தியானந்தா பயன்படுத்தியது தேர்டு ஐ. அதாவது மூன்றாவது கண்.

மூன்றாம் கண்ணை திறப்போம்

(நித்யானந்த சர்ச்சை நீளும்)

நித்தி தப்பிய ரூட்

நித்தி தீவு வாங்கியது ஏன், எப்படி?

நித்தியின் நிதி திரட்டும் வித்தை

Source: Minambalam.com

Author Image
murugan