சிறுவனை கொஞ்சும் ராகுல் காந்தி2 நிமிட வாசிப்புவயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் சிறுவனை…

சிறுவனை கொஞ்சும் ராகுல் காந்தி2 நிமிட வாசிப்புவயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் சிறுவனை…

வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் சிறுவனைத் தனது மடியில் அமரவைத்துக் கொஞ்சும் காணொளி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டில் சில நாட்களாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பள்ளி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று அவர் கலந்துகொண்டு வருகிறார். கடந்த மாதம் கேரள பள்ளி ஒன்றில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமி ஷஹ்லா ஷெரின் குடும்பத்தினரை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Congress leader Mr src=twsrc%5Etfw”>@RahulGandhi ‘s interaction with a child in src=twsrc%5Etfw”>#Wayanad… 😊 pic.twitter.com/kQzcLYecQH

— Supriya Bhardwaj (@Supriya23bh)

December 6, 2019

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 6) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறுவன் ஒருவனைத் தனது மடியில் உட்கார வைத்து அவர் கொஞ்சி விளையாடியுள்ளார். அந்த சிறுவனும் ராகுல் காந்தியின் முகத்தைப் பிடித்துப் பார்த்து விளையாடியுள்ளார். இதுகுறித்த காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் சில நாட்கள் ராகுல் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Source: Minambalam.com

Author Image
murugan