10-க்கு அப்பறம் 9 :இது ஆப்பிள் கணக்கு!3 நிமிட வாசிப்புஆப்பிளின் ஐஃபோன் மாடல்கள் ரிலீஸான வருடங்களை வரிசைப்படுத்திக்கொண்டே வந்தால், அதில் 8 வரை வரிசையாக…

10-க்கு அப்பறம் 9 :இது ஆப்பிள் கணக்கு!3 நிமிட வாசிப்புஆப்பிளின் ஐஃபோன் மாடல்கள் ரிலீஸான வருடங்களை வரிசைப்படுத்திக்கொண்டே வந்தால், அதில் 8 வரை வரிசையாக…

ஆப்பிளின் ஐஃபோன் மாடல்கள் ரிலீஸான வருடங்களை வரிசைப்படுத்திக்கொண்டே வந்தால், அதில் 8 வரை வரிசையாக வரும். 8-க்கு பிறகு நேராக 10, 11 என வந்து மீண்டும் 9இல் போய் நிற்கும். இப்படித்தான் தனது டைம்லைனை வடிவமைத்திருக்கிறது ஆப்பிள்.

2017ஆம் ஆண்டு ஐஃபோன் 8 மற்றும் 8 பிளஸ் ஆகிய மாடல்களை வெளியிட்டிருந்தது ஆப்பிள். அந்த சமயத்தில் ஐஃபோன் வெளியிட்டு பத்து வருடங்கள் ஆகிவிட்ட நிகழ்வும் வந்துவிட்டதால், நேரடியாக ஐஃபோன் X என்ற மாடலை வெளியீடு செய்து, சந்தையில் புயலைக் கிளப்பியது. இந்தப்புயல் ஐஃபோன் 8 மற்றும் 8 பிளஸ்ஸின் விற்பனையில் மண்ணை அள்ளிப் போட்டது வேறு கதையாக இருந்தாலும், ஐஃபோன் x மற்றும் ஐஃபோன் 11, 11 பிளஸ், 11 ப்ரோ மேக்ஸ் என வரிசையாக மார்க்கெட்டை அதகளம் செய்துவருகிறது. இதில், ஐஃபோன் 9 என்ற மாடல் விட்டுப்போனதை விரும்பாத ஆப்பிள் நிறுவனம், அடுத்த வருடத்தில் சிறப்பு எடிஷனாக ஐஃபோன் 9-ஐ வெளியிட வாய்ப்பிருப்பதாக, ஆப்பிள்தொலைபேசிகளை அனலைஸ் செய்யும் மிங் சி-குவா தெரிவித்திருக்கிறார்.

image

2015ஆம் ஆண்டில், ஐஃபோன் சிறப்பு எடிஷன் என்ற மேம்படுத்தப்பட்ட பேசிக் ஆப்பிள் ஐஃபோன்களின் மாடல் ஒன்றினை ஆப்பிள் அறிமுகப்படுத்தியது. குறைந்த விலையில் ஆப்பிளின் தரத்துடன் கிடைத்த அந்ததொலைபேசிகளை அப்போது பலரும் வாங்கி மகிழ்ந்தனர். அதுபோலவே, இப்போதும் ஐஃபோன் 9-ஐ வெளியிட்டு, குறைந்த விலையில் ஐஃபோன் வாங்கக் காத்துக்கொண்டிருப்பவர்களுக்கான வாய்ப்பை உருவாக்குகிறதா ஆப்பிள் எனப் பொருத்திருந்து பார்ப்போம்.

Source: Minambalam.com

Author Image
murugan