இன்று உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு!3 நிமிட வாசிப்புஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை மாநிலத் தேர்தல் ஆணையம்  திரும்பப்பெற பெற்றது.

இன்று உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு!3 நிமிட வாசிப்புஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை மாநிலத் தேர்தல் ஆணையம் திரும்பப்பெற பெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை மாநிலத் தேர்தல் ஆணையம் திரும்பப்பெற பெற்றது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை செல்லாது என அறிவித்தது. அத்தோடு, வார்டு மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என்றும், அங்கு இடஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று (டிசம்பர் 7) வெளியிட்ட அரசாணையில், “தமிழகத்தில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு டிசம்பர் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பமாக இருந்தது. எனினும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து, இரண்டு கட்டங்களாக நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தல் ரத்துசெய்யப்படுகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஆகியோரின் நியமனங்களையும் திரும்பப் பெறுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் புதிய தேதி அறிவிப்பு தொடர்பாக மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆணையர் பழனிசாமி கோயம்பேட்டிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதன்படி, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணை இன்று மாலை 4 மணியளவில் வெளியாகலாம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Source: Minambalam.com

Author Image
murugan