தனித்தீவில் நித்தி மட்டுமா..? ஹாலிவுட் நடிகையும் உல்லாசா வாழ்கை..!

தென் அமெரிக்க நாடான் ஈகுவெடார் அருகே சொந்தமாக தனித்தீவை வாங்கி, அதனை தனிநாடாக அறிவித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் நித்தியானந்தா. கைலாசா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நாட்டிற்கென தனி இணையதளத்தை உருவாக்கியுள்ள அவர், கைலாசா குறித்து முழு விவரங்களையும் அதில் வெளியிட்டுள்ளார். உள்ளூர் முதல் தேசிய ஊடகங்கள் வரை கைலாசா குறித்து தான் செய்திகள் வலம் வந்த வண்னம் உள்ளன. இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ள நித்தியானந்தா தனித்தீவை வாங்கியது வேண்டுமென்றால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் உலகின் பெரும் பணக்காரர்கள், ஹாலிவுட் பிரபலங்கள், பாப் பாடகர்கள் என பலர் ஏற்கனவே தங்களுக்கென்று ஒரு தனித்தீவை சொந்தமாக கொண்டுள்ளனர்.

Source: AsianetTamil

Author Image
Kundralan M