ஹைதராபாத் எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்).. வாழ்த்து விளம்பர ஒட்டி போட்ட அஜீத் ரசிகர்கள்.. வேறெங்கே.. மதுரைதான்!

ஹைதராபாத் எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்).. வாழ்த்து விளம்பர ஒட்டி போட்ட அஜீத் ரசிகர்கள்..

மதுரை: தெலுங்கானா காவல்துறையினருக்கு மதுரை அஜீத் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துகளுடன் கூடிய விளம்பர ஒட்டி ஒட்டப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கால்நடை பின் மருத்துவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை கொலையும் செய்தனர்.

இந்த நிகழ்வு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கியது. இந்த சம்பவத்தை கண்டித்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் சமூக அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அதிகாலையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் தெலுங்கானா காவல்துறையினர் எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்) செய்ததாக செய்தி வந்தது. இதை இந்தியா மட்டுமில்லாது அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வந்தனர்.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் தெலுங்கானா காவல்துறையினருக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் வண்ணம் மதுரை முழுவதும் விளம்பர ஒட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த போஸ்டரில் அஜித் நடித்து வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் வரக்கூடிய நோ மீன்ஸ் நோ என்ற வசனத்துடன் கூடிய விளம்பர ஒட்டி ஒட்டி இதில் தெலுங்கானா காவல்துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மதுரை முழுவதும் விளம்பர ஒட்டி ஒட்டிய தில் பரபரப்பு ஏற்பட்டது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram