திடீரென வெளியே வந்த பெண்ணின் பிணம்.. அலறி தெறித்து ஓடிய மக்கள்.. சிக்கிய கோவா துக்காராம்!

திடீரென வெளியே வந்த பெண்ணின் பிணம்.. அலறி தெறித்து ஓடிய மக்கள்.. சிக்கிய கோவா துக்காராம்!

கோவா: மண்ணுக்குள் இருந்து பெண்ணின் பிணம் நீட்டிக் கொண்டு வெளியே வந்ததை கண்டு பொதுமக்கள் தெறித்து ஓடினர்.. கட்டின கணவனே மனைவியை உயிருடன் புதைத்து கொன்ற இந்த சம்பவம் கோவா மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

கோவாவில் கூலி வேலை செய்து வருபவர் துக்காராம்.. இவரது மனைவி 44 வயது தான்வி.. ரொம்ப நாளாகவே தான்விக்கு உடம்பு சரியில்லை… அதனால் படுத்த படுக்கையாக இருந்து வந்தார்.

இதனால் துக்காராம்தான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று தான்வியை கவனித்து வந்தார். கூலி தொழிலாளி என்பதால், துக்காராம் பணத்துக்கு கஷ்டப்பட்டார்.. அதனால் தான்விக்கு மருத்துவமும் பார்க்க முடியவில்லை.. நோயுடன் போராடும் மனைவியை கண்முன்னாடி வைத்து கொண்டு, சிகிச்சைக்கு பணமும் இல்லாமல் மிகுந்த வேதனைக்கு ஆளானார். அதனால், மனைவியை கொன்றுவிடலாம் என்று துக்காராம் முடிவு செய்தார்.

அதற்காக தான்வியை நர்விம் என்ற கிராமத்துக்கு அழைத்து சென்று, அங்கே ஒரு கால்வாய் அருகே உயிருடன் புதைத்தும் விட்டார். இதனிடையே தான்வியை புதைத்த அந்த கால்வாய் பகுதியில் நீர்ப்பாசன திட்டத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

imageமின்னல் வேகம்.. விறுவிறுவென மேலே ஏறி.. ஆண்களே செய்ய தயங்கும் வேலை.. அசால்ட் காட்டிய ஜோதி!

வழக்கம்போல் தொழிலாளர்கள் பள்ளம் தோண்டி கொண்டிருந்தனர்.. அப்போது, இதை பார்த்து அதிர்ந்து போன துக்காராம்.. “வேண்டாம்.. இங்கே பள்ளம் தோண்டாதீங்க.. வேலையை நிறுத்துங்க” என்று அலறி கத்தினார். ஆனாலும் ஊழியர்கள் இதை காதில் வாங்காமல் தொடர்ந்து பள்ளம் நோண்டினர்.

ஆனால் துக்காராம் அங்கேயே உட்கார்ந்துவிட்டார்.. படபடப்பாகவே இருந்தார்.. முதல் பக்கெட்டில் மண் அள்ளி போடப்பட்டுவிட்டது.. இரண்டாம் பக்கெட்டில் மண்ணை அள்ளும்போதுதான் என்னமோ தட்டுப்பட்டுள்ளது. அதனால் மிஷினை நிறுத்திவிட்டு, அது என்ன என்று பள்ளத்தில் சென்று பார்த்தனர்.. அப்போதுதான், ஒரு பெண்ணின் உடல் மண்ணுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர்.

உடனடியாக இதை பற்றி காவல்துறையில் புகார் சொல்லவும், துக்காராமிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் சொல்லும்போது, “என் மனைவிக்கு உடம்பு சரியில்லை.. சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.. மருந்து செலவுக்கு காசும் இல்லை.

பணம் இல்லாததால் என் 14 வயது மகனை ஸ்கூலுக்கும் அனுப்ப முடியவில்லை.. அதனாலதான் உயிருடன் கொன்றுவிட்டேன்.. அந்த இடத்துக்கு யாரும் வர மாட்டாங்கன்னு நினைச்சேன்.. ஆனா, இப்படி வந்து பள்ளம் நோண்டுவாங்கன்னு எதிர்பார்க்கவில்லை” என்றார். இதையடுத்து, மனைவியை உயிருடன் புதைத்த துக்காராமை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram