மயிலாடும்பாறை பகுதியில் வைகையாற்றின் கரையில் புதிய தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை

மயிலாடும்பாறை பகுதியில் வைகையாற்றின் கரையில் புதிய தடுப்பு சுவர் கட்ட கோரிக்கை

வருசநாடு: மயிலாடும்பாறை பகுதியில் மூல வைகையாற்றின் கரையில் புதிய தடுப்புச் சுவரை கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், மயிலாடும்பாறை ஊராட்சியில் இந்திராநகர் குடியிருப்பு உள்ளது. மூல வைகையாற்றில் சில தினங்களுக்கு முன்பு வெள்ளம் கரைபுரண்டோடியபோது, இப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரத்தில் உள்ள தடுப்பு சுவர் 200 மீட்டர் தூரத்துக்கு இடிந்து விழுந்தது. இதில் ஆற்றின் கரை அரிக்கப்பட்டு, காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.

இந்நிலையில் இடிந்த தடுப்பு சுவருக்கு பதிலாக புதிய தடுப்பு சுவர் எடுத்து கட்டப்படாமல் உள்ளது. இதனால் வைகையாற்றில் மீண்டும் வெள்ளம் ஏற்படும்போது, இப்பகுதியில் கரை அரிக்கப்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதிமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வெள்ள பாதிப்பை தவிர்க்க, ஆற்றங்கரையில் புதிய சுற்றுச்சுவரை உடனடியாக எழுப்ப வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy