நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட நான் தயார்: ராமநாதபுரம்  …3 நிமிட வாசிப்புநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்குத் தான் தயாராக உள்ளதாக …

நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கிலிட நான் தயார்: ராமநாதபுரம் …3 நிமிட வாசிப்புநிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்குத் தான் தயாராக உள்ளதாக …

நிர்பயா வழக்கு குற்றவாளிகளைத் தூக்கிலிடும் பணிக்குத் தான் தயாராக உள்ளதாக டெல்லி திகார் சிறைக்கு, ராமநாதபுரம் காவல் துறை ஏட்டு சுபாஷ் சீனிவாசன் விண்ணப்பக் கடிதம் எழுதியுள்ளார்.

2012ல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிர்பயா வழக்கில் கைதானவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்தர் தாக்கூர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 16 வயது சிறுவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வினய் சர்மா கருணை கோரி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தார். ஆனால் இவரின் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் பாலியல் வழக்குகளில் குற்றவாளிகள் கருணை மனுக்கள் அளிக்கும் உரிமை தொடர்பாக நாடாளுமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, டெல்லி திகார் சிறையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஆட்கள் இல்லை என்று தகவல் வெளியாகின. இந்நிலையில் இந்த பணிக்குத் தான் தயார் என ராமநாதபுரம் காவல் துறை ஏட்டு சுபாஷ் சீனிவாசன் திகார் சிறை தலைமை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற நான்கு பேரைத் தூக்கிலிடச் சிறையில் ஆள் இல்லை என்றும் இதனால் தண்டனை தள்ளிப்போவதாகவும் செய்திகள் வருகின்றன. குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். எனவே நான் அந்தப் பணியைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் பணியிடை பயிற்சி மையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரின் சிறப்பான செயல்பாட்டினைப் பாராட்டி தமிழக அரசு சார்பில் முதல்வரின் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Minambalam.com

Author Image
murugan