இப்படி வளர வச்சுட்டீங்களே டா: அப்டேட் குமாரு6 நிமிட வாசிப்புஎப்படியாச்சும், ஒரு வெங்காயத்தையாவது ஸேஃபா எடுத்து வைக்கணும்னு  பக்கத்துவீட்டு பையன் சொல்ற…

இப்படி வளர வச்சுட்டீங்களே டா: அப்டேட் குமாரு6 நிமிட வாசிப்புஎப்படியாச்சும், ஒரு வெங்காயத்தையாவது ஸேஃபா எடுத்து வைக்கணும்னு பக்கத்துவீட்டு பையன் சொல்ற…

எப்படியாச்சும், ஒரு வெங்காயத்தையாவது ஸேஃபா எடுத்து வைக்கணும்னு பக்கத்துவீட்டு பையன் சொல்றான். என்ன ஆச்சுடான்னு கேட்டா, ‘அது ஒண்ணும் இல்ல அண்ணே, இப்படியே போய்கிட்டு இருந்தா தங்கத்த விட வெங்காய விலை ஏறிரும் போல இருக்கு. அப்புறம் அத பாக்க கூட கிடைக்காது. அதுதான் ஒரு வெங்காயத்தயாவது பத்திரப்படுத்தி மியூசியத்தில வைக்கலாம்னு இருக்கேன். நம்ம எதிர்கால சந்ததிகள் எல்லாம் கொஞ்சம் பாக்கட்டுமே!’னு சொல்றான். ஆமா அதப்பத்தி நான் கூட யோசிச்சேன்னுசொன்னேன். ‘உசுப்பேத்தியே உசரத்துக்கு கூட்டிட்டு போவாய்ங்கண்ணு சும்மாவா சொன்னாங்க. இந்த காணொளி பாருப்பா’ன்னு அண்ணன் ஒருத்தர் நித்தியானந்தா பேசுற காணொளிவக் காட்டுறாரு. ஆனால் இப்படி சொந்தமா நாடு வாங்குற அளவுக்கு ஒருத்தன வளர வச்சிருக்காய்ங்களே. நான் அதைப் பாத்திட்டு வர்றேன். நீங்க அப்டேட்ட படிங்க.

இதயவன்

சிறு வயதில் என் அம்மா

எனக்கு மட்டும் தான்

அம்மா என அடித்துகொண்ட உடன்பிறப்புகள்

அவரின் வயோதிக காலத்தில் எனக்கு எதுக்கு அம்மா என அடித்து கொள்கிறார்கள்.

ட்விட்டர் தாதா

வயதுக்கு தகுந்த சந்தோசத்தை கொடுக்காவிட்டாலும்…

வயதுக்கு மீறிய கஷ்டத்தையும் வலிகளையும் தருகிறது இந்த #வாழ்க்கை

image

Arvika

மழை நின்றபின்னும்

குடைமடக்க மறுகின்றன …

காளான்கள்

சித்ரா தேவி

சின்ன வெங்காயம் கிலோ ₹200

பெரிய வெங்காயம் ₹180

நாடா இல்லை வெறும் காடா ?

சிலந்தி

நம் பேச்சை அலாரம் கேட்கிறது..

ஆனால், அலாரத்தின் பேச்சை நாம் மதிப்பதில்லை..

image

மித்ரன்

நித்தியானந்தாவி்ன் பாஸ்போர்ட்டை ரத்து செய்துள்ளோம்! – வெளியுறவுத்துறை அமைச்சகம்

சூரியனை மறைக்கிறவன் கிட்ட போய் பாஸ்போர்ட் ரத்து பன்னிருக்காங்களாம்

உம்மா 😘😘😘%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88?src=hash&refsrc=twsrc%5Etfw”>#இனியகாலை pic.twitter.com/VbUweQWTfs

— 🤔எனக்கொரு டவுட்டு ⁉ (@Thaadikkaran)

src=twsrc%5Etfw”>December 7, 2019

இதயவன்

தெலுங்கானா என்கவுண்டரை தமிழக அரசு முன் உதாரணமாக எடுத்து கொள்ளவேண்டும் −சீமான் #

கதை விடுறதுல

உங்களை முன் உதாரணமா எடுத்துக்கனுமா ணே ?!!

அழகிய கவிதை🕊

நான் கட்டிய வீடு என்று சொல்லும் தகுதி முதலில் பறவைகளுக்கும் இரண்டாவது கொத்தனார்களுக்கும் தான் உள்ளது..

செந்திலின்_கிறுக்கல்கள்

ஒட்டடை நிரந்தரமாக குடியிருக்கும் இடத்திற்கு பேச்சுலர்ஸ் ரூம் என்று பெயர்…!

அட இது நல்லாருக்கே 😁😁 pic.twitter.com/o6a5VSW4OE

— கடைநிலை ஊழியன் (@Suyanalavaathi)

December 7, 2019

கோழியின் கிறுக்கல்!!

வெங்காயம் எனக்கு பிடிக்காததால் நான் உண்ணாமல் இருப்பது என் உரிமை!

வாங்க முடியாததால் உண்ணாமல் இருப்பது அரசின் தோல்வி!!

சவேதி

“அறிவுரை “

சொல்பவர்களை விட

“கேட்பவனே “

அதிக பொறுமைசாலி…!

image

கோழியின் கிறுக்கல்

சில உறவுகள் விடுதியில் தங்குவது போலவே,

அவர்களுக்கான நேரம் முடிந்தவுடன் நம்மை Check out செய்ய சொல்லி வற்புறுத்துவாரகள்!!

டீ இன்னும் வரலை 🧭

Raajavijeyan

ஒரு கிலோ

வெங்காயம் வாங்குனா

ஒரு ஸ்மார்ட் தொலைபேசி

இலவசம்..ங்குற நிலைமை

வந்துருமோ…

இதயவன்

ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருப்பதாக கூறினால், சாலைகளில் ஏன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது? – பாஜக எம்.பி வீரேந்தரா சிங்

பணமதிப்பு இழப்பு செய்துவிட்டு கறுப்புபணத்தை ஒழிச்சுட்டோம்ன்னு நம்ப சொன்னவங்க தான மேன் நீங்க எல்லாம் ?!!!

செந்திலின்_கிறுக்கல்கள்

டூருக்கு திட்டம் போடும் நண்பனும், வாட்ஸப் அட்மீனும் ஒன்னு எல்லாம் பேசுவதோடு சரி செயலில் ஒன்னும் இருக்காதது டிசைன்!

image

எனக்கொரு டவுட்டு

வெங்காயம் உரித்தால் பெண்கள் கண் கலங்குவார்கள் என்றே வெங்காய உற்பத்தியை இந்தியா நிறுத்தியதுன்னு இன்னும் வட நாட்டுல யாரும் கிளம்பலயா..!

மித்ரன்

என்னை யாராலும் அழிக்க முடியாது – நித்தியானந்தா

தெலங்கானா காவல் துறை கிட்ட பேசுறியா..?!

நெல்லை அண்ணாச்சி

கற்பழித்தவர்கள்…

எதிர்ப்படுதல் (என்கவுண்ட்டர்)…

தெலுங்கானா….!!!

கற்பழிக்கப்பட்ட பெண்

எரித்து கொலை…

உத்திரப்பிரதேசம்…!!!

-லாக் ஆஃப்

Source: Minambalam.com

Author Image
murugan