ரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடையில்லை: தேர்தல் ஆணையம்4 நிமிட வாசிப்புபொங்கல் பரிசு வழங்கப்படுவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி பதிலளித்துள்ளா…

ரூ.1000 பொங்கல் பரிசுக்கு தடையில்லை: தேர்தல் ஆணையம்4 நிமிட வாசிப்புபொங்கல் பரிசு வழங்கப்படுவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி பதிலளித்துள்ளா…

பொங்கல் பரிசு வழங்கப்படுவது தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட இருந்த நிலையில், அதற்கு சில நாட்கள் முன்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த நவம்பர் 29ஆம் தேதி துவக்கிவைத்தார்.

இதுதொடர்பாக நவம்பர் 29ஆம் தேதி நாம் வெளியிட்ட செய்தியில், “பொங்கல் பண்டிகைக்கு மதவேறுபாடில்லாமல் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் ரேஷன் அட்டைக்கு பொங்கல் பணம் இரண்டாயிரம் ரூபாய் தமிழக அரசு சார்பில் கொடுப்போம். இப்போதே வேட்பாளர்களை எல்லாம் தேர்வு செய்து வைத்துக் கொள்வோம். பொங்கல் பணத்தை ஞாயவிலைக்கடைகள் மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை அதிமுக வேட்பாளர்களுக்குக் கொடுத்துவிடலாம். அப்படிக் கொடுத்து முடித்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தால் மழையும் இல்லாமல் இருக்கும், மக்களின் மனதைத் திருப்திப்படுத்திவிட்டு தேர்தலை சந்தித்த மாதிரியும் இருக்கும் என்பதுதான் வேலுமணி தரப்பில் வைக்கப்பட்டுள்ள யோசனை” என்று தெரிவித்திருந்தோம்.

இதேபோல பொங்கலுக்கு 45 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில் தற்போதே மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டிய அவசியம் என்ன ஏன் என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள், உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே வழங்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (டிசம்பர் 7) செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி, இரண்டாவது முறையாக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு திட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “விதிகளின்படி ஏற்கனவே நடைமுறையில் இருப்பவை தொடரலாம். அதுகுறித்து பரிசீலிக்கப்படும்” என்று பதிலளித்தார் பழனிசாமி.

“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தேர்தல் ஆணையத்திற்கு பின்னடைவு எதுவும் இல்லை. நாங்கள் தேர்தல் நடத்துவதற்கு தயாராக இருந்தோம். உச்ச நீதிமன்றம் சில ஆணைகளை பிறப்பித்தது. அதைப் பின்பற்றி தேர்தலை நடத்துகிறோம்” என்று தெரிவித்தவரிடம்,

எதிர்க்கட்சிகள் உங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றனரே என்று கேட்டதற்கு, “உள்ளாட்சித் தேர்தலை நியாயமான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்துவருகிறது” என்று குறிப்பிட்டார்.

நகர்ப்புற பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்ப, “விரைவில் நடத்தப்படும்” என்று ஒரே வார்த்தையை மட்டும்தான் தேர்தல் ஆணையர் பதிலாகத் தெரிவித்தார்.

Source: Minambalam.com

Author Image
murugan