“பெண்களுக்கான சிறு ஆறுதல்” – நயன்தாரா அறிக்கை!3 நிமிட வாசிப்புதெலங்கானா மாநிலத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த…

“பெண்களுக்கான சிறு ஆறுதல்” – நயன்தாரா அறிக்கை!3 நிமிட வாசிப்புதெலங்கானா மாநிலத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த…

தெலங்கானா மாநிலத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த குற்றவாளிகளை, தெலங்கானா காவல்துறை என்கவுன்டரில் கொலை செய்தது. இதுகுறித்து நடிகை நயன்தாரா அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையான நாயகர்களால் இன்று உண்மையாகியிருக்கிறது. தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான, சட்டத்திற்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதிலளித்துள்ளார்கள். பெண்களின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது மிக சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான நடவடிக்கை என அழுத்தி சொல்வேன். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்து கொள்ளலாம். பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்வு செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்நடவடிக்கை சற்றேனும் பயம் தரும். மனிதம் என்பது அனைவரிடத்தும் சரிசமமாக மரியாதை தருவதும், அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம் நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குறிப்பாய் நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான, அன்பான உலகாக மாற்ற வேண்டியது நம் கடமை. அப்போது தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்தும் பகிர்ந்து கொள்ள முடியும். R.I.P Priyanka Reddy.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நயன்தாராவின் இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, ‘தெலங்கானா கால்நடை மருத்துவருக்குக் கிடைத்த நீதி மாதிரியே, உன்னாவ் வழக்குக்கும் நாங்கள் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதைப்பற்றியும் நீங்கள் வாய் திறந்து பேசினால் நன்றாக இருக்கும்” என்று இணையப் பயனாளர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்துவருகின்றனர்.

Source: Minambalam.com

Author Image
murugan