திருமண நாள் அன்று  நிறைவேறிய நடிகர் சதீஷின் 25 வருட கனவு!  டபுள் சந்தோஷத்தில் கழுத்தில் மாலையோடு அவரே பேசிய காணொளி!

திருமண நாள் அன்று நிறைவேறிய நடிகர் சதீஷின் 25 வருட கனவு! டபுள் சந்தோஷத்தில் கழுத்தில் மாலையோடு அவரே பேசிய காணொளி!

நடிகர் சதீஷுக்கும் , அவருடைய காதலி சிந்துவிற்கும் இன்று சென்னையில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

இந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்கும் விதத்தில், இன்று பட பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட ‘தலைவர் 168 ‘ படத்தில் நடிகர் சதீஷ் கமிட் ஆகியுள்ளார் என்பதை, அதிகார பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

மாலையும், கழுத்துமாய் நடிகர் சதீஷ் தன்னுடைய நன்றிகளை தெரிவிக்கும் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளது சன் பிச்சர்ஸ் நிறுவனம். இதில் பேசியுள்ள சதீஷ் “அனைவருக்கும் வணக்கம், இந்த ஒரு நாள் என் வாழ்க்கையில் நான் மிகவும் ஏங்கி கொண்டிருந்த நாள். மாலையெல்லாம் பார்த்து விட்டு, கல்யாணத்திற்கு என்று நினைக்க வேண்டாம். அது கொஞ்சம் நாள் தான். கிட்ட தட்ட 25 வருடங்களாக ஏங்கி கொண்டிருந்த ஒரு விஷயம் ஜாம்பவான் படத்தில் நடிக்க வேண்டும் என்பது. அது ஒரு நல்ல நாளில் எனக்கு கிடைத்திருக்கிறது.

தலைவர் 168 படத்தில் நானும் நடிக்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த, இயக்குனர் சிவா , சன் பிக்சர்ஸ்  நிறுவனத்தின் கலாநிதி மாறன் மற்றும் தலைவர் ஜாம்பவான் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். 

அந்த காணொளி இதோ…

தலைவரின் வெறித்தனமான ரசிகனுக்கு கிடைத்த வேற லெவல் திருமணப் பரிசு. பல வருட கனவு நிஜமான நாள் 😍😍 Thank u so much to @directorsiva sir @sunpictures #KalanidhiMaaran sir and Our #Superstar #Thalaivar @rajinikanth sir. Love u all 🙏🏻🤗🙏🏻 https://t.co/Qezqv52uv2

— Sathish (@actorsathish) December 11, 2019

 

Source: AsianetTamil

Author Image
Kundralan M