அந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்!

அந்த பையை இப்படி கொடுங்க.. 20 கிலோ எடை.. அப்படியே பிடித்து உள்ளே போட்டு.. அசத்தல் மேடம்!

Woman Rescues Live Python From Kochi Naval Colony In Kerala | மலைபாம்பை அசால்ட்டா தூக்கிய பெண்

கேரளா: வளைந்து நெளிந்து நிற்கிறது 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு.. பயமா.. எனக்கா.. நெவர்.. என்று சொன்ன அந்த பெண், “அந்த பையை இப்படி குடுங்க” என்று வாங்கி அதற்குள் பாம்பை பிடித்து உள்ளே போட்டு, இறுக்கி கட்டுகிறார்.. இந்த தில் காணொளிதான் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

எர்ணாகுளம் அருகே கடற்படையில் பணிபுரியும் ஒரு அதிகாரியின் வீடு உள்ளது.. இந்த வீட்டின் பின்பக்கத்தில் புதர் உள்ளது.. அங்கிருந்து ஒரு பாம்பு இவர்கள் வீட்டுக்குள் புகுந்துவிட்டது.. இதை அந்த அதிகாரியின் மனைவி வித்யா பார்த்துவிட்டார்.

அலறி அடித்து கொண்டு ஓடுவார் என்று பார்த்தால், பாம்பை நோக்கி தான் வந்தார்.. 20 கிலோ எடை உள்ள மலைபாம்பு என்று தெரிந்தும் அதை பயப்படாமல் பிடிக்க முன்வந்தார்.

அவருடன் அக்கம்பக்கத்தினரும் உதவிக்கு வந்தனர்.. புதருக்குள் இருந்து பாம்பு எட்டி பார்க்கவும், லபக்கென வித்யா அதை லாவகமாக பிடித்து கொண்டார்.. மற்றவர்கள் பாம்பின் வாலை மட்டுமே பிடிக்க.. வித்யாவோ பாம்பை அப்படியே பிடித்தார்.

20 Kg python caught alive by wife of senior Navy officer.
Leave aside women, wonder how many men can show such guts.
I love my Navy. pic.twitter.com/6XNUBvE7MU

— Harinder S Sikka (@sikka_harinder)

December 11, 2019

பிறகு ஒரு சாக்கு பையை வாங்கி, அதற்குள் அந்த மலைப்பாம்பை திணித்து.. பிறகு இறுக கட்டினார். வித்யா 20 கிலோ எடையுள்ள பாம்பை அசால்ட்டாக பிடிப்பதை அங்குள்ளவர்கள் காணொளி எடுத்துள்ளனர். இந்த சிலிர்ப்பூட்டும் காணொளி சோஷியல் ஊடகம்வில் பரவி வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் இந்த காணொளியை பார்த்து, வித்யாவை பாராட்டி தள்ளி வருகின்றனர். கொஞ்ச நேரத்திலேயே ஏராளமான லைக்குகள் வித்யாவுக்கு சேர்ந்துவிட்டன..அதிலும் பாம்பை பிடிக்கும்போது, நோ.. பச்சா.. என்று வித்யா சொல்லி அழைத்தது எல்லோரையுமே ஈர்த்துவிட்டது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram