பக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்

பக்கத்தில் யோகி.. பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்தபடி.. கங்கையில் பிரதமர் மோடி போட்டிங்

கான்பூர்: உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் கங்கை நதியில் போட்டிங் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.

தேசிய கங்கை நதியை கவுன்சில் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜலசக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், மற்றும் பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஆகியோர் பங்கேற்றனர்.

கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணிகள் எந்த அளவில் இருக்கின்றன என்பது தொடர்பாக அப்போது பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கான்பூர் நகரம் 260 சதுர கிலோமீட்டருக்கும் மேல் பரந்து விரிந்து 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழக்கூடிய இந்தியாவின் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால் நவீன தொழில்நுட்ப முறையில் கழிவுநீரை அகற்றும் பணிகள் அந்த நகரத்தில் இல்லாத காரணத்தால், 150 முதல் 175 மில்லியன் லிட்டர் அளவுக்கான கழிவுநீர் கங்கை நதியில் கலந்து விடுகிறது.

Kanpur: PM Modi takes a boat ride in river Ganga at Atal ghat, along with CM Yogi Adityanath, Bihar Dy CM Sushil Modi & Uttarakhand CM TS Rawat. He chaired the first meeting of National Rejuvenation, Protection and Management of River Ganga Council (National Ganga Council) today. pic.twitter.com/r0mk26QGAL

— ANI UP (@ANINewsUP)

December 14, 2019

இந்த நகரத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இருப்பதால் அதன் கழிவுகள் கங்கையில் கலக்கின்றன. இதை தவிர்ப்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

imageமனம்போன போக்கில் மசோதாக்களை நிறைவேற்றும் மத்திய அரசு.. டெல்லி பேரணியில் சோனியா பேச்சு

இதன்பிறகு கங்கை நதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத், பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மற்றும் உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், ஆகியோருடன் அதல் காட்டில் கங்கா நதியில் படகு சவாரி செய்தார் பிரதமர் மோடி. பாதுகாப்பு ஜாக்கெட்டுகளை அணிந்தபடி ஆலோசித்தபடியே, அவர்கள் போட்டிங் செய்தனர்.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram