செல்பி எடுத்த இளைஞர்களை தாக்க முயன்ற காட்டு யானை

செல்பி எடுத்த இளைஞர்களை தாக்க முயன்ற காட்டு யானை

ஊட்டி: கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் நடந்து சென்ற காட்டு யானை, செல்பி எடுத்த இளைஞர்களை தாக்க முயன்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில் முகாமிட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை குஞ்சப்பனை நெடுஞ்சாலையில், அந்த காட்டு யானை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்ல வழியில்லாததால் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்றது.

அப்போது அவ்வழியாகஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் வந்த இளைஞர்கள், யானையுடன் செல்பி எடுக்க முயற்சித்தனர். யானை அவர்களை தாக்கஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கை நோக்கி வேகமாக வந்தது. இதற்கிடையே பார வண்டி ஒன்று வந்ததால், யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
இதையறிந்த, வனத்துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகள் விலங்குகளை துன்புறுத்தாமல் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy