ஜார்கண்ட் 4வது கட்ட சட்டசபை தேர்தல்.. 7 மணிக்கு வாக்குப்பதிவு துவக்கம்

ஜார்கண்ட் 4வது கட்ட சட்டசபை தேர்தல்.. 7 மணிக்கு வாக்குப்பதிவு துவக்கம்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று 4ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. அதில் முதல்கட்டத் தோ்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. 3ம் கட்ட தேர்தல் டிசம்பர் 12ம் தேதி நடைபெற்றது.

3ம் கட்டத்தில் தலைநகர் ராஞ்சி, ராம்கர், ஹசாரிபாக், கோடேர்மா, சத்ரா, கிரிடி மற்றும் சரிகேலா-கர்சவன் ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 4வது கட்ட தேர்தல் 15 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது.

Newest First Oldest First


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram