பாஜக ஏற்பாடு செய்த விழா.. உற்சாகமாக கலந்து கொண்ட அமித் ஷா.. பட்டம் விட்டு கொண்டாட்டம் – காணொளி!

பாஜக ஏற்பாடு செய்த விழா.. உற்சாகமாக கலந்து கொண்ட அமித் ஷா.. பட்டம் விட்டு கொண்டாட்டம் – காணொளி!

அகமதாபாத்: அகமதாபாத்தில் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பட்டம் விட்டார்.

தமிழகத்தில் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை பொங்கலுக்காக மக்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். நாடு முழுக்க பொங்கல் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு கலாச்சார பின்புலத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல வடமாநிலங்களில் சங்கராந்தி இதே தினத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குஜராத்தில் இன்றும் நாளையும் உட்டாரயான் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வாக, பட்டம் விட்டு மக்கள் கொண்டாடுவார்கள்.

#WATCH Gujarat: Union Home Minister Amit Shah flies a kite during an #Uttarayan programme in Ahmedabad. pic.twitter.com/cNKhQwiFnt

— ANI (@ANI)

January 14, 2020

அதன்படி இன்று குஜராத்தில் பல பகுதிகளில் மக்கள் பட்டம் விட்டு கொண்டாடினார்கள். அதேபோல் அகமதாபாத்தில் அரசியல் தலைவர்கள் பலர் பட்டம் விட்டு கொண்டாடினார்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்று பட்டம் விட்டார். அகமதாபாத்தில் பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பட்டம் விட்டார். அவர் பட்டம் விட்ட வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

[embedded content]


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram