திருமணம் செய்து கொள்ள கொடுமை காதலி கழுத்தறுத்து கொலை: திருச்செங்கோடு ஜோதிடர் சரண்: காவல் துறையினர் தீவிர விசாரணை

திருமணம் செய்து கொள்ள கொடுமை காதலி கழுத்தறுத்து கொலை: திருச்செங்கோடு ஜோதிடர் சரண்: காவல் துறையினர் தீவிர விசாரணை

திருச்செங்கோடு: திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்த இளம்பெண்ணை ஜோதிடர் கழுத் தறுத்து கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள ஆண்டிவலசை பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (50). ஜோதிடர். இவரது மகள் வெள்ளையம்மாள் (21). இவரை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த ஒருவருக்கு கந்தசாமி திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணமான 3 மாதத்திலேயே கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக வெள்ளையம்மாள் கணவரை விவாகரத்து செய்துவிட்டு, தந்தை கந்தசாமி வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொசவம்பட்டி அன்னை செட்டியார் நகரை சேர்ந்த ஜோதிடர் முத்து (25) என்பவருடன் வெள்ளையம்மாளுக்கு பழக்கம் எற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலிப்பதால், அடிக்கடி போனில் பேசியும், நேரில் சந்தித்தும் வந்தனர்.

இதுபோன்று பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி திரிந்தனர். அப்போது, முத்து, வெள்ளையம் மாளிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவரிடம் உல்லாசம் அனுபவித்து வந்தார். மேலும் வெள்ளையம்மாளிடம் தனது குடும்ப கஷ்டத்தை கூறி முத்து, பல லட்சம் பணம் பெற்றுள்ளார். முத்து கேட்கும் போது எல்லாம் வெள்ளையம்மாள் தனது நகையை அடமானம் வைத்தும் பல்வேறு இடத்தில் பணம் கடனாக வாங்கியும் கொடுத்துள்ளார். இவ்வாறு நாட்கள் சென்றன.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளையம்மாள், முத்துவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். வெள்ளையம்மாள் கேட்கும் போது எல்லாம் முத்துபல்வேறு காரணம் கூறி காலம் கடத்தி வந்தார். ஆனால் வெள்ளையம்மாள் விடாது அவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் வெள்ளையம்மாள் முத்துவிடம், தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இதுபோன்று பல முறை தகராறு நடந்ததால், கடந்த 11ம் தேதி முத்து, வெள்ளையம்மாளை போனில் தொடர்பு கொண்டு திருச்சி அருகே உள்ள தொடையூருக்கு சென்று திருமணம் செய்து கொள்ள லாம் என்று கூறியுள்ளார்.
இதனை நம்பி வெள்ளையம்மாள் கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்து சென்றார். தொடையூருக்கு சென்று முத்துவை சந்தித்த பின்னர் இருவரும் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள ஆற்றங்கரை ஓரத்திற்கு சென்றனர். அங்கு இருவரும் நின்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது, இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளையம்மாள் கழுத்தை ஆடு அறுப்பது போல் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.இதனை பார்த்து பயந்துபோன முத்து போலீசில் மாட்டிக்கொள்வோம் என நினைத்து, வெள்ளையம்மாளை அங்கு ஆற்றங்கரை ஓரத்திலேயே குழி தோண்டி புதைத்து விட்டு எதும் தெரியாததுபோல் திருச்செங்கோட்டிற்கு வந்துள்ளார். கடந்த 12ம் தேதி வீட்டில் மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த கந்தசாமி இதுகுறித்து திருச் செங்கோடு புறநகர் போலீசில் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட போலீ சார் வழக்குபதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். வெள்ளையம்மாளுக்கு நொருக்கமானவர்களை பிடித்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் முத்து நேற்று இரவு 9 மணியளவில் திருச்செங்கோடு தாசில்தார் கதிர்வேலிடம் சரணடைந்தார். கதிர்வேல் முத்துவை, திருச்செங்கோடு புறநகர் போலீசில் ஒப்படைத்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குபதிவு செய்து முத்துவை கைது செய்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன் விசாரணை நடத்தினார்.

அப்போது முத்து, `நாங்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தோம். வெள்ளையம்மாள் எனக்கு பண உதவி செய்தார். நான் அதனை பயன்படுத்தி கொண்டு அவரிடம் அதிகளவு பணம் பெற்றேன். கடந்த சில நாட்களாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்து வந்தேன். இதனால் ஏற்பட்ட தகராறில் எனக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினார். ஆத்திரத்தில் இருந்த நான் அவரை விட்டு விலக ஆரம்பித்தேன்.
அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள் இல்லை என்றால் என்னிடம் இருந்து வாங்கிய பணத்தை திரும்ப கொடு என கேட்டு டார்ச்சர் செய்தார். மேலும் போலீசில் புகார் அளித்துவிடுவேன் என மிரட்டினார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்ட நான் திருச்சிக்கு அழைத்து சென்று கொலை செய்தேன். இதனை யாருக்கும் தெரியாமல் மறைக்க அங்கேயே புதைத்தேன். தற்போது, போலீசில் மாட்டிக்கொள்வோம் என பயந்து, நான் சரணடைந்துவிட்டேன்` என கூறியுள்ளார். இதனை கேட்ட போலீசார் தொடையூர் போலீஸ் ஸ்டேஷன்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் தொடையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருமணம் செய்து கொள்ள டார்ச்சர் செய்த காதலியை ஜோதிடர் கொலை செய்து புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy