நிர்பயா வழக்கு  – ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி முகேஷ் சிங்

நிர்பயா வழக்கு – ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி முகேஷ் சிங்

நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி முகேஷ் சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று கருணை மனு அனுப்பியுள்ளார்.

புதுடெல்லி:

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவு (மரண வாரண்டு) கடந்த 7-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே, நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் அவர்கள் திட்டமிட்டபடி தூக்கிலிடப்படுவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.

தூக்கு தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருப்பதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், டெல்லி கோர்ட்டு பிறப்பித்திருந்த மரண வாரண்டுக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு ஒன்றையும் இன்று முகேஷ் சிங் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan