ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதல் ….  ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மூன்று மாணவர்கள்   தலைமறைவு …

ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதல் …. ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மூன்று மாணவர்கள் தலைமறைவு …

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து  டெல்லி போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி இதை நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகி  உள்ளது..இதுதொடர்பாக இந்தியா டுடே ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி முக்கிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.

அங்கு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் பெயர் கோமல் சர்மா. இவர் டெல்லி பல்கலைக் கழகத்தில்  படிக்கிறார். இவர்  ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏபிவிபி அமைப்பை சேர்ந்த முதலாம் ஆண்டு ஜேஎன்யூ மாணவர் அக்சத் அவாஸ்தி இந்த தாக்குதலில் முக்கியமானவர். இந்த ஸ்டிங் ஆபரேஷனில் முதலில் சிக்கியது இவர்தான். இந்த கலவரத்தில் ரோஹித் ஷா என்ற இன்னொரு நபருக்கும் முக்கிய தொடர்பு உள்ளது.

இவர்களை விசாரிக்க டெல்லி போலீஸ் அழைப்பு விடுத்தது. ஆனால் மூன்று முறை அழைத்தும் டெல்லி போலீசை சந்திக்கவில்லை.மீண்டும் மீண்டும் அழைத்தும் இவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லவில்லை. தலைமறைவாக உள்ள இவர்கள் மூவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். 

Source: AsianetTamil

Author Image
Kundralan M