அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று தொடங்கியது.

மதுரை:

பொங்கல் திருநாளான இன்று (15-ந் தேதி) மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதற்கு அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நின்று ரசிக்க பேரிகார்டுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் 700  காளைகள், 730 மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. போட்டியில் பங்கேற்கும் 730 மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். 

வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு விழாவில் அமைச்சர் ஆர்.பி, உதயகுமார், எம்எம்ஏக்கள் கலெக்டர் விஜய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan