கோவை அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 8,300 குழந்தைகள் பிறந்தன

கோவை அரசு மருத்துவமனையில் ஓராண்டில் 8,300 குழந்தைகள் பிறந்தன

கோவை:  கோவை அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு ஆண்டில் மொத்தம் 8,300 குழந்தைகள் பிறந்துள்ளன.கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் தாய்மார்களுக்கு சுக பிரசவத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள், நடைபயிற்சி, யோகா பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 22 வெண்டிலேட்டர் வசதிகள் உள்ளது. மேலும், மஞ்சள் காமாலை, மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வரும் தாய்மார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இங்கு 8 ஆயிரத்து 300 குழந்தைகள் பிறந்துள்ளன. மேலும், 2018ல் 8 ஆயிரத்து 227 குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy