கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் திறந்து கிடக்கும் கேட் வால்வு தொட்டியால் விபத்து அபாயம்

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியில் திறந்து கிடக்கும் கேட் வால்வு தொட்டியால் விபத்து அபாயம்

கரூர்: கரூர் ஆண்டாங்கோயில் கிழக்கு பகுதியில் திறந்த நிலையில் உள்ள கேட்வால்வினை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் ஈரோடு செல்லும் சாலையில் ஆண்டாங்கோயில் கிழக்கு பகுதி உள்ளது. பகுதியை சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.பகுதி முழுதும் அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் வழங்குவதை முறைப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் கேட்வால்வு அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் இந்த பகுதியில் இருந்து எம்ஜிஆர் நகர்ப்பகுதிக்கு செல்லும் சாலையோரம் கேட்வால்வு திறந்த நிலையில் உள்ளன. இதனால், சிறுவர் சிறுமிகள் முதல் அனைத்து தரப்பினர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.மேலும், இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் திறந்த நிலையில் உள்ள கேட்வால்வு காரணமாக பீதியுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, கேட்வால்வினை சிலாப் மூலம் மூட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Source: Dinakaran

Author Image
Puvi Moorthy