அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 16 பேர் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 16 பேர் காயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போது வரை நான்கு மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர் ஒருவர் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.

மதுரை:

அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தது. 

* காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மாடுகளை அனுப்பும் டோக்கன் குளறுபடியால்   மாடு உரிமையாளர்களை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். 

* காளைகலை அடக்கும் வீரர்களுக்கு அண்டா, குக்கர் என விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டது.

* அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில்  தற்போது வரை நான்கு மாடுபிடி வீரர்கள் மாட்டின் உரிமையாளர் ஒருவர் உட்பட 16பேர் காயமடைந்துள்ளனர்.  இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

* மாட்டை பிடிக்க முயன்ற மாட்டின் உரிமையாளர் விக்னேஷ் என்பவர் மீது மற்றொரு மாடு முட்டியதில் காயமடைந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan