திமுக கூட்டணியிலிருந்து காங். விலகினாலும் கவலையில்லை.. உங்களுத்தான் நஷ்டம்.. துரைமுருகன் பரபரப்பு!

திமுக கூட்டணியிலிருந்து காங். விலகினாலும் கவலையில்லை.. உங்களுத்தான் நஷ்டம்.. துரைமுருகன் பரபரப்பு!

சென்னை: திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை, அது காங்கிரசுக்கு தான் நஷ்டம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே பெரிய சண்டை ஏற்ப்பட்டுள்ளது. இந்த சண்டைக்கு கூட்டணி தர்மம்தான் காரணம் என்று காங்கிரஸ் கூறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. திமுக கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் திமுகவை சமாதானப்படுத்தும் விதமான கே.எஸ் அழகிரி இரண்டு அறிக்கை வெளியிட்டார். ஆனால் திமுக இன்னும் காங்கிரஸ் தலைவர் மீதம், தமிழக காங்கிரஸ் கமிட்டி மீதும் கோபத்தில்தான் இருக்கிறது.

imageஎம்.ஜி.ஆர்.தாத்தா… ஜெயலலிதா பாட்டி… அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு

போனால் போகட்டும்

இந்த பிரச்சனை தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் போயிட்டு போறாங்க. எங்களுக்கு என்ன வந்தது. எங்களுக்கு அதனால் துளி அளவு கூட பிரச்சனை கிடையாது.

கூட்டணி எப்படி

கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. குறிப்பா நான் துளி கூட கூட கவலைப்பட மாட்டேன். அவர்களுக்குத்தான் சிக்கலாக முடியும். அது காங்கிரசுக்கு தான் நஷ்டம்.

காங்கிரஸ் கட்சி

எங்களுக்கு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து விலகினாலும், வாக்கு வங்கி பாதிக்காது. அவர்களுக்கு வாக்கு வங்கி இருந்தால்தானே, நாங்கள் பாதிக்கப்படுவோம். எங்கள் கட்சியில் வேறு சிலர் வேறு மாதிரி சொல்லலாம். நான் நேரடியாக என்னுடைய பதிலை சொல்லிவிட்டேன், என்று துரைமுருகன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

துரைமுருகன் என்ன சொன்னார்

துரைமுருகன் கொடுத்த இந்த அதிரடி பேட்டியால் காங்கிரஸ் தரப்பு ஆடிப்போய் இருக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி இடையிலான விரிசல் இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இது தொடர்பாக இதுவரை ஸ்டாலின் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[embedded content]


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram