இந்தியா வரும் ட்ரம்ப்: இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை!2 நிமிட வாசிப்புஇந்தியாவில் அமெரிக்க அதிபா் ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தேதிகளை இறுதி செய்வதற…

இந்தியா வரும் ட்ரம்ப்: இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை!2 நிமிட வாசிப்புஇந்தியாவில் அமெரிக்க அதிபா் ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தேதிகளை இறுதி செய்வதற…

இந்தியாவில் அமெரிக்க அதிபா் ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தேதிகளை இறுதி செய்வதற்காக இருநாட்டு அதிகாரிகளிடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று (ஜனவரி 14) மத்திய அரசு வட்டாரங்கள், ‘கடந்த ஆண்டில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபா் ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இருப்பினும், பணிச்சூழல் காரணமாக அவா் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. அவரது பயணத் தேதிகளை இறுதி செய்ய இருநாட்டு அதிகாரிகளின் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கின்றன,

அமெரிக்க அதிபா் ட்ரம்ப்பைப் பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை அந்நாட்டு எதிர்க்கட்சியினா் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனா். எனவே, ட்ரம்ப் இந்தியாவுக்கு வருவதற்கான தேதியை இறுதி செய்வது அமெரிக்காவின் அரசியல் சூழல் மேம்படுவதையொட்டியே இருக்கும்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமா் நரேந்திரமோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, ட்ரம்ப் அவருடைய குடும்பத்துடன் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

Source: Minambalam.com

Author Image
murugan