விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு: புதிய  ரகங்கள் அறிமுகம்! …3 நிமிட வாசிப்புதமிழக விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக 13 புதிய ரக பயிர்களை தமிழ்நாடு வேளாண் …

விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு: புதிய ரகங்கள் அறிமுகம்! …3 நிமிட வாசிப்புதமிழக விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக 13 புதிய ரக பயிர்களை தமிழ்நாடு வேளாண் …

தமிழக விவசாயிகளுக்குப் பொங்கல் பரிசாக 13 புதிய ரக பயிர்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழக வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்த ஆண்டு நெல் கோ 53, நெல் ஏடீடி 54, கரும்பு சிஒசி 13339, பருத்தி கோ 17, உளுந்து வம்பன் 11, சோளம் கோ 32, திணை ஏடிஎல் 1, வாழை கோ 2, தக்காளி கோ 4, சிறிய வெங்காயம் கோ 6, மரவள்ளி ஒய்டிபி 2, கொடுக்காப்புளி பிகேஎம் 2 மற்றும் மணத்தக்காளி 1 என்ற புதிய ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

நெல் பிரிவில் இரண்டு ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், கோ 53 என்பது வறட்சி பகுதியான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வறட்சியைத் தாங்கி வளர்ந்து, விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். மற்றொரு நெல் ரகமான ஏடிடி 54 மத்திய கால ரகமாகும். இதுவும் அதிக மகசூலைத் தரும் அரவைத் திறன் கொண்ட நெல் ரகமாகும்.

இது தவிர இரண்டு ஒட்டு வாழை ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோ 2 என்ற பூவன் வாழை ரகம் எக்டருக்கு 32 டன் மகசூல் தரும். மேலும் வாழையைத் தாக்கும் நூற் புழு மற்றும் வாடல் நோய் எதிர்ப்புத் திறன் இந்த வாழைக்கு அதிகம்.

மரவள்ளியில் ஒய்டிபி 2 என்ற ரகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எக்டருக்கு 46.2 டன் கிழங்கைத் தரும். இதில் மாவு சத்து 30 சதவிகிதம் தான் இருக்கும் என்பதால் அனைவருக்கும் ஏற்றது.

மணத்தக்காளி கோ 1 ரக கீரை ஹெக்டருக்கு 30 முதல் 35 டன் மகசூலைக் கொடுக்கிறது. வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஊட்டச்சத்து மிகுந்த கீரை என்பதால் மருத்துவப் பயன் அதிகம் கொண்டது. இதை வீடுகளில் மாடித் தோட்டத்தில் கூட வளர்க்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

Source: Minambalam.com

Author Image
murugan