மகாபாரதத்தில் அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்தது – மேற்கு வங்க ஆளுநர்

மகாபாரதத்தில் அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்தது – மேற்கு வங்க ஆளுநர்

ராமாயணம் காலத்திலேயே பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும் மகாபாரதத்தில் அர்ஜுனன் அம்பில் அணு ஆயுதம் இருந்ததாகவும் மேற்கு வங்க ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் தொடங்கி வைத்தார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “ 1910 அல்லது 1911 ஆண்டுகளில் தான் விமானங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், ராமாயண காலத்திலேயே பறக்கும் தேர்கள் இருந்தன. மகாபாரத காலத்தில் போர் களத்தில் இல்லாத சஞ்சயன் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று பார்த்து கூறினான். அர்ஜுனனின் அம்பில் அணு ஆயுதம் இருந்து. எனவே, உலகம் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது” என்று கூறினார்.

இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநரின் இந்த பேச்சு அறிவியல் அறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அறிவியல் கண்காட்சியில், இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை ஆளுநர் தவிர்க்க வேண்டும் என அறிவியல் அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan