மந்திரியான பிறகே விமானத்தில் பறந்தேன்: ஜிதேந்திரசிங்

மந்திரியான பிறகே விமானத்தில் பறந்தேன்: ஜிதேந்திரசிங்

நான் எனது இளமை பருவத்தில் விமான நிலையத்தையோ அல்லது விமானத்தையோ பார்த்ததுகூட இல்லை. மத்திய மந்திரியான பிறகுதான் கடந்த 2014-ம் ஆண்டில் முதல் முறையாக ஹெலிகாப்டரில் பயணித்தேன். அதன்பிறகே விமானத்தில் பறந்தேன் என்று மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி :

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ‘பாரத் தர்சன்’ என்ற பெயரில் பள்ளிக்கூட மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

அதன்படி, ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூட மாணவர்கள் 150 பேர் டெல்லி வந்தனர். விமானநிலையத்தில் அவர்களிடம் மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் பேசும்போது “13 முதல் 14 வயதிலேயே ஜம்முவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் செய்யும் நீங்கள் (மாணவர்கள்) மிகவும் அதிர்ஷ்டசாலிகள். நான் எனது இளமை பருவத்தில் விமான நிலையத்தையோ அல்லது விமானத்தையோ பார்த்ததுகூட இல்லை. மத்திய மந்திரியான பிறகுதான் கடந்த 2014-ம் ஆண்டில் முதல் முறையாக ஹெலிகாப்டரில் பயணித்தேன். அதன்பிறகே விமானத்தில் பறந்தேன்” என்றார்.

இந்த சுற்றுலாவின்போது மாணவர்கள் 2 நாட்கள் டெல்லியை சுற்றிப்பார்க்கின்றனர். பின்னர் ஐதராபாத் செல்கிறார்கள். 

Source: Maalaimalar

Author Image
murugan