மகாபாரதத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந்தது… மேற்கு வங்க ஆளுநர்

மகாபாரதத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந்தது… மேற்கு வங்க ஆளுநர்

கொல்கத்தா: மகாபாரதத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந்தது என மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் பேசியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அறிவியல் கண்காட்சியை அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “1910 அல்லது 1911 ஆண்டுகளில் தான் விமானங்கள் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால் ராமாயண காலத்திலேயே விமானங்களைப் போன்ற பறக்கும் தேர்கள் இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அம்பில் அணு ஆயுதம் இருந்தது. எனவே உலகம் இந்தியாவை புறக்கணிக்க முடியாது” என்றார்.

இந்நிலையில் அறிவியல் கண்காட்சியில், இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை ஆளுநர் தவிர்க்க வேண்டும் என அறிவியல் அறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

imageபாலமேடு ஜல்லிக்கட்டு துவங்கியது.. திடீரென நடத்தப்பட்ட தடியடியால் பரபரப்பு

இதனிடையே தனது கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கர் விளக்கம் அளித்துள்ளார். இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் அதன் அறிவியல் பின்புலத்தில் தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்தார். சிலர் ராமரை புராண கதாபாத்திரம் என்று சொல்கிறர்கள், அதை தன்னால் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்

[embedded content]


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram