எஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்?- குற்றவாளிகள் வாக்குமூலம்

எஸ்.ஐ. வில்சனை கொன்றது ஏன்?- குற்றவாளிகள் வாக்குமூலம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவரும், கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை, அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரும் கடந்த 8ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள். 

அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில், கர்நாடகா மாநிலம் உடுப்பி ரெயில் நிலையத்தில் இரண்டு வாலிபர்களையும் கர்நாடகா போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

கன்னியாகுமரி மாவட்ட போலீசார் இரண்டு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கியூ பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், வில்சனை கொன்றதற்கான காரணத்தை இருவரும் கூறி உள்ளனர். 

தங்களது அமைப்பை சேர்ந்தவர்களை போலீஸ் தொடர்ந்து கைது செய்ததால் கொன்றதாக கூறி உள்ளனர். தங்களையும் போலீஸ் குறிவைத்து சுட்டுக் கொல்லலாம் என்பதால் எதிர்ப்பை காட்டவே, இந்த கொலையை செய்ததாக கூறியுள்ளனர். விசாரணைக்குப் பிறகு இன்று இருவரும், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan