இந்திய ரூபாய் நோட்டில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிட்டால் பணமதிப்பு உயரும்..  சுவாமி

இந்திய ரூபாய் நோட்டில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிட்டால் பணமதிப்பு உயரும்.. சுவாமி

போபால்: இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் இந்திய பணத்தின் மதிப்பு உயரும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இது ஒருபுறம் எனில் அண்மைக்காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவருகிறது.

இந்நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த ஐடியா ஒன்றை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கொடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தா வியாக்யான்மாலா என்ற பெயரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இந்தோனேஷிய நாட்டு கரன்சியில், விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளது. விநாயகர் தடைகளை நீக்குபவர்.

imageகாஷ்மீர் பிரச்சனை… ஐநாவில் மீண்டும் தோற்றுப்போன பாகிஸ்தான்-சீனா.. இனிமேலாவது.. இந்தியா நச் பதிலடி

எனவே இதேபோல் இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமியின் படத்தை அச்சிட வேண்டும். அதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும். இந்த முயற்சிக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். இதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும், இதைப் பற்றி யாரும் மோசமாக நினைக்கக்கூடாது ” இவ்வாறு கூறினார்.

[embedded content]


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram