மருமகன் வளர்ச்சியை கொஞ்சமும் டிஸ்டப் செய்யாத மாமனார்…. பட்டையைக் கிளப்பும் “பட்டாஸ்”… முதல் நாள் வசூல் இவ்வளவா?

மருமகன் வளர்ச்சியை கொஞ்சமும் டிஸ்டப் செய்யாத மாமனார்…. பட்டையைக் கிளப்பும் “பட்டாஸ்”… முதல் நாள் வசூல் இவ்வளவா?

இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பட்டாஸ்’. இந்த திரைப்படம் பொங்கல் விருந்தாக நேற்று உலகம் முழுவதும் ரிலீஸானது. “கொடி” படத்திற்கு பிறகு அப்பா, மகன் இரண்டு கெட்டப்புக்களில் நடிகர் தனுஷ் கலக்கியிருக்கிறார்.  படத்தின் முதல் பாதி மாஸாகாவும், இரண்டாவது பாதி செம்ம மாஸாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் நடிகை சினேகா அப்பா தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மகன் தனுஷுக்கு ஜோடியாக நடிகை, மெஹரின் பிரிசண்டா நடித்துள்ளார். புதுப்பேட்டை படத்திற்கு பின்,  தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்திருக்கும் இந்த படத்தை, சத்யஜோதி பிலிம்ஸ் மிக பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படம் மூலம் தான் ஒரு நடிப்பு அசுரன் தான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் தனுஷ். 

படம் வெளியான முதல் நாளே சோசியல் மீடியாக்களில் நல்ல விமர்சனங்களும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 9ம் தேதி வெளியான “தர்பார்” படத்தால், பட்டாஸிற்கு அதிக அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அனைத்திலும் “பட்டாஸ்” பட்டையைக் கிளப்பி வருகிறது.

“பட்டாஸ்” முதல் நாள் சென்னையில் மட்டும் 51 லட்சம் வரை வசூல் செய்துள்ளது. இது தனுஷின் திரைப்பயணத்தில் டாப் 5 படங்களின் வசூல் ஆகும். ”தர்பார்” திரைப்படம் ஆரம்பத்தில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், பட்டாஸிற்கு வரும் நல்லவிதமான விமர்சனங்கள் பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Source: AsianetTamil

Author Image
Kundralan M