ஹூஸ்டன்  பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை! இதுவரை சுமார் 4 கோடி சேர்ந்தது

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை! இதுவரை சுமார் 4 கோடி சேர்ந்தது

ஹூஸ்டன்: அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க இதுவரை மூன்று கோடியே 85 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளது.

தமிழக முதல்வர் .எடப்பாடி பழனிசாமி 23.12.2019 அன்று தலைமை செயலகத்தில், தமிழ் வளர்ச்சி துறை சார்பில், அமெரிக்கா நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழத்தில் தமிழ் இருக்கை அமைப்பத்திற்காக தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை ,ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பனிடம் வழங்கினார்.

துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தன் சொந்த பணத்தில் ஏழு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். அப்போது அமைச்சர் பாண்டியராஜன், இருக்கையின் ஆலோசர்கள் டாக்டர்.வி.ஜி. சந்தோசம், டாக்டர்.விஜய் பிரபாகர் ஆகியோர் இருந்தனர்.

அக்டோபர் 1 2019 அன்று ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தர் ரேணு கட்டோர், இருக்கையின் தலைவர் சாம் கண்ணப்பன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுதிட்டினர்.இதுவரை $550,000 சேர்ந்துள்ளது. மொத்தம் 2 மில்லியன் டாலர்கள் சேர்க்க வேண்டும். டெக்சாஸ் மாநில அரசு ஆராய்ச்சிக்காக ஆகும் செலவில் 75% தொகையை பொருந்த செய்யும்.

ஹூஸ்டன் தமிழ் இருக்கை பற்றி மேலும் விவரம் அறிய +1.908.516.3069 / [email protected] / www.houstontamilchair.org தொடர்பு கொள்ளலாம்..

[embedded content]


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram