மாறுகிறது ரஷ்ய அரசியலமைப்பு.. ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா

மாறுகிறது ரஷ்ய அரசியலமைப்பு.. ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் திடீர் ராஜினாமா

மாஸ்கோ: ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு அரசியலைமைப்பில் மாற்றங்கள் செய்ய உள்ளதாக அறிவித்திருப்பதால் பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அந்நாட்டு அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்போவதாக திட்டத்தை அறிவித்தார். இது பற்றி அவர் கூறுகையில், ரஷ்ய அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்வது குறித்து நாட்டு குடிமக்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

அனைவரின் கருத்தின் அடிப்படையில் நாம் ஒரு வளமான நாட்டை உருவாக்க முடியும். இந்த மாற்றங்கள் ஒரு புதிய பிரதமரையும், புதிய அமைச்சரவையையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும்” என்றார்.

imageஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை! இதுவரை சுமார் 4 கோடி சேர்ந்தது

இதையடுத்து தான் ரஷ்ய பிரதமரான டிமிட்ரி மெத்வதேவ் அதிபர் புதினுடன் தொலைக்காட்சியில் தோன்றி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தையும் புதினிடம் அளித்தார்..

[embedded content]


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram