மச்சினிச்சியுடன் ‘அந்த’ உறவு..  கர்ப்பிணி மனைவியை கொன்றுவிட்டு கணவன் நாடகம்

மச்சினிச்சியுடன் ‘அந்த’ உறவு.. கர்ப்பிணி மனைவியை கொன்றுவிட்டு கணவன் நாடகம்

காசியாபாத்: மனைவியின் தங்கையுடன் தவறான உறவு வைத்திருந்த கணவர், தனது 35 வயது மனைவியை ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த ரஞ்சனி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவருக்கும் அவரது அக்காவின் கணவருக்கும் திடீரென கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தங்கள் உறவை பல நாள் வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மனைவியை தீர்த்துக்கட்ட ரஞ்சனியின் அக்காள் கணவர் விரும்பினார். விஷம் கொடுத்து கொலை செய்ய திட்டமிட்டு அந்த முயற்சி தோற்றுப்போனதால் திருட்டு கொலை என்ற முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

அவரது திட்டப்படி வீட்டை யாரோ கொள்ளையடித்து அதில் அவரது மனைவியை கொன்றுவிட்டார்கள் என்று நாடகம் போட திட்டமிட்டார். இதற்காக மூன்றுபேருக்கு பணம் கொடுத்து அழைத்து வந்துள்ளார். அவர்கள் 35வயதாகும் அவரது கர்ப்பிணி மனைவியை கொலை செய்தனர். இந்த உண்மையை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கண்டுபிடித்தனர்.

imageதிருச்சி அருகே இளம்பெண்ணின் கழுத்தறுத்து கொலை.. கொள்ளிடம் ஆற்றில் புதைத்த காதலன் கைது

குற்றவாளி தனது மைத்துனி ரஞ்சனியுடன் சேர்ந்து வாழவே இப்படி தனது மனைவியை கொன்றதாக வாக்கு மூலம் கொடுத்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

[embedded content]


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

Author Image
vikram