காந்திக்கு பதில் லட்சுமி: சுப்பிரமணியன் சுவாமி சிபாரிசு …2 நிமிட வாசிப்புஇந்திய ரூபாய் தாள்களில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் ம…

காந்திக்கு பதில் லட்சுமி: சுப்பிரமணியன் சுவாமி சிபாரிசு …2 நிமிட வாசிப்புஇந்திய ரூபாய் தாள்களில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் ம…

இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படத்தை அச்சிட்டால், ரூபாயின் மதிப்பு உயரும் என ராஜ்யசபா எம்.பி.யும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ம.பி மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, விவேகானந்தர் குறித்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும்” என்று தெரிவித்தார். இதற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்தோனேஷியா நாட்டின் பண மதிப்பு நோட்டில் விநாயகர் படம் அச்சிடப்பட்டுள்ளதாகவும், விநாயகர் தடைகளை நீக்குபவர் என்றும் தனது கருத்தைத் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவில் சிஏஏ தவறு ஒன்றும் செய்யவில்லை என்றும், 2003இல் மன்மோகன் சிங்கும் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை கோரியிருந்தார். நாங்கள் இப்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுக்கின்றன என்றார்.

Source: Minambalam.com

Author Image
murugan