கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி: ராணுவ வீரர்களுக்கு பிரதமர்  …3 நிமிட வாசிப்புஜம்மு காஷ்மீரில், பனிப்பொழிவுக்கு மத்தியில், கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ரெட்சரில் …

கர்ப்பிணி பெண்ணுக்கு உதவி: ராணுவ வீரர்களுக்கு பிரதமர் …3 நிமிட வாசிப்புஜம்மு காஷ்மீரில், பனிப்பொழிவுக்கு மத்தியில், கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ரெட்சரில் …

ஜம்மு காஷ்மீரில், பனிப்பொழிவுக்கு மத்தியில், கர்ப்பிணி பெண்ணை ஸ்ட்ரெட்சரில் சுமந்தபடி, மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்த ராணுவ வீரர்களை, பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான ‘சினர் கார்ப்ஸ்’ அமைந்துள்ளது. பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் இந்தியா புரியும் சண்டைகள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றை அப்படையின் வீரர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த வீரர்கள் நேற்று (ஜனவரி 15) ஒரு வீடியோவை சமூக வலைதளமான ‘ட்விட்டரி’ல் பதிவிட்டிருந்தனர். அந்த வீடியோவில் கர்ப்பிணி பெண் ஒருவரை வீரர்கள் ஸ்ட்ரெட்சரில் தூக்கிக்கொண்டு செல்லும் காட்சிகள் அமைந்திருந்தன.

அந்தப் பதிவில், “கடும் பனிப்பொழிவு சமயத்தில், கர்ப்பிணியான ஷமீமா என்பவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. எனவே 100 ராணுவ வீரர்கள், உறவினர்களுடன் இணைந்து அந்தப் பெண்ணை ஸ்ட்ரெட்சரில் சுமந்துகொண்டு நான்கு மணி நேரத்தில் மருத்துவமனையை அடைந்தோம். அந்தப் பெண்ணுக்குப் பிரசவத்தில் நல்லபடியாக குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர்” என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, ராணுவ வீரர்களின் செயலுக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவில் “வீரத்திற்கும், சேவை யை சிறப்பாக செய்வதற்கும் நம் ராணுவத்தினர் பெயர்பெற்றவர்கள். அதுமட்டுமல்லாமல், மனிதாபிமான செயல்களுக்காகவும் அவர்கள் மதிக்கப்படுகின்றனர். மக்களுக்கு உதவி தேவைப்படும் நேரங்களில், ராணுவ வீரர்கள் அந்த இடத்துக்குச் சென்று, முடிந்த உதவிகளை செய்கின்றனர். நம் ராணுவத்தால் பெருமைப்படுகிறேன். ஷமீமாவும், அவரது குழந்தையும், நல்ல உடல்நலத்துடன் இருக்க, நான் பிரார்த்திக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Source: Minambalam.com

Author Image
murugan